குமரியில் அரசின்  தீர்வுதளம் நிகழ்ச்சி  அமைச்சர் பங்கேற்பு !

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே செறுகோல் ஊராட்சி குட்டைக்காடு புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தீர்வு தளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.;

Update: 2024-07-06 10:33 GMT
குமரியில் அரசின்  தீர்வுதளம் நிகழ்ச்சி   அமைச்சர் பங்கேற்பு !

தீர்வுதளம் நிகழ்ச்சி 

  • whatsapp icon
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே செறுகோல் ஊராட்சி குட்டைக்காடு புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தீர்வு தளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, பேசுகையில்- தீர்வுதளம் நிகழ்ச்சியின் நோக்கமே பொதுமக்களின் நீண்டகால பிரச்சனைகளை அறிந்து கொண்டு அவற்றிற்கு உடனடி தீர்வு காண்பதே ஆகும். அதனடிப்படையில் பல்லாயிரகணக்கான மனுக்களுக்கு அந்தந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக நமது மாவட்டத்தில் இதுநாள் வரை சுமார் 12,000 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, முதியோர் உதவித்தொகை, பட்டாக்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களாகிய நீங்கள்  அனைவரும் தமிழ்நாடு அரசிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன். என பேசினார்.தொடர்ந்து அமைச்சர்  ஒரு பயனாளிக்கு இலவச வீட்டு மனை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்கள். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம்,  செருகோல் ஊராட்சி தலைவர் அனுசன் ஐயப்பன்,  துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News