பன்னாட்டு லயன் சங்கங்கள் சார்பில் ஆளுநர் கௌரவிப்பு விழா
,மாமல்லபுரத்தில் பன்னாட்டு லயன் சங்கங்கள் சார்பில் முன்னாள் ஆளுநர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இதில் துணை ஆளுநர் அன்பரசு தனக்கு சொந்தமான சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை முதியோர் இல்லத்திற்கு தானமாக வழங்கினார்,
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பன்னாட்டு லயன் சங்கங்கள் சார்பில் ஆளுநர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மாத விழா தலைவர் ஓம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் ஆளுநர்கள் கௌரவிக்கப்படட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது, விழாவில் பேசிய ஆளுநர்கள் நமது சங்கத்தை மேலும் வலுப்படுத்தி நம்மால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்திட வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டனர்,
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் மதியழகன், பன்னாட்டு இயக்குனர் மதனகோபால்,முதல் துணை ஆளுநர் அன்பரசு,இரண்டாம் துணை ஆளுநர் அம்சவல்லி,உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜேந்திரன்,மாவட்ட ஆலோசகர் தளபதி, முன்னாள் ஆளுநர்கள் வெங்கடபெருமாள்,நரசிம்மன், முருகப்பா, அரவிந்தகுமார், மாவட்டவை செயலாளர் சரவணன்,மாவட்ட அவை பொருளாளர் கண்ணன், மாவட்ட நிர்வாகி சிவகுமார், மாமல்லபுரம் டவுன் லயன்ஸ் சங்கத் தலைவர் தேவேந்திரன்,செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் சிவகுமார், மாவட்ட தலைவர் புனித வேல் உள்ளிட்ட ஏராளமான லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
இதனைத் தொடர்ந்து துணை ஆளுநர் அன்பரசு தனக்கு சொந்தமான சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை மாமல்லபுரம் டவுன் லைன் சங்கம் முன்னிலையில் முதியோர் இல்லத்திற்காக தானமாக வழங்கினார், இவரை மாமல்லபுரம் டவுன் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி கௌரவித்தனர்.