அரசு கலைக் கல்லூரியில் சேர கலந்தாய்வு

2024-25 ம் கல்வி ஆண்டில் கரூர் அரசு கலைக் கல்லூரியில் சேர கலந்தாய்வு நடத்தப்பட்டது.

Update: 2024-05-25 12:46 GMT

2024-25 ம் கல்வி ஆண்டில் கரூர் அரசு கலைக் கல்லூரியில் சேர கலந்தாய்வு. கரூர் அடுத்த தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் அரசு கலைக்கல்லூரியில் 2024- 25 ம் ஆண்டு கல்வி ஆண்டில் சேரும் மாணாக்கர்களுக்கு கலந்தாய்வு குறித்து கல்லூரியின் முதல்வர் மாரியம்மாள் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 30-ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப் பிரிவுகளும் (முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள்,தேசிய மாணவர் படை விளையாட்டு பிரிவு மாணவ- மாணவியர்கள் மற்றும் அந்தமான் - நிக்கோபார் மாணவர்களுக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூன் 10-ல் இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதே போல, ஜூன் 12ல் வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 14ல் இளம் அறிவியல், இயற்பியல், வேதியல், கணிதம், புள்ளியல், கணினி அறிவியல், இளம் அறிவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், புவி அமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவிற்கும் நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24 இல், இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 26 இல் வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 28 ல் இளம் அறிவியல், இயற்பியல்,வேதியல், கணிதம், புள்ளியல், கணினி அறிவியல், இளம் அறிவியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், புவி அமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெறும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News