மலை கிராமத்தில் அரசு பேருந்து மீண்டும் இயக்கம்
ஆறுகாணி மலை கிராமத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கம்.;
Update: 2024-05-03 12:24 GMT
ஆறுகாணி மலை கிராமத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கம்.
குழித்துறை அரசு போக்குவரத்து கழக இரண் டாவது டெப்போவில் இருந்து இயக்கப்பட்டு வந்த தடம் எண் 86 பஸ் அதிகாலை 4.30 க்கு ஆறுகாணியில் இருந்து புறப்பட்டு பத்துகாணி, கடையாலுமூடு வழியாக மார்த்தாண்டம் செல்லும். அதிகாலை நேரத்தில் மலை பகுதியில் இருந்து புறப்பட்டு, மலையோர கிராமங்கள் வழியாக மார்த்தாண்டம் செல்லும் பஸ் தொழிலாளர்களுக் கும், சிறு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும்அதிக பயன் அளித்து வந்தது. அடுத்து டிரிப்புகள் மார்த்தாண்டத்தில் இருந்து பத்துகாணி, கணபதிக்கல், ஆலஞ்சோலை பகுதிகளுக்கு இயக்கப்பட்டும் வந்தது. இரவு 9.15 க்கு மார்த்தாண்டத்தில் இருந்து புறப்படும் பஸ் அருமனை, களியல், கடையாலுமூடு, ஆலஞ் சோலை, பத்துகாணி வழியாக இரவு 10.30 க்கு ஆறுகாணி வந்தடையும். மலையோர பகுதி மக்களுக்கு இந்த தடத்தில் இயக்கப்படும் கடைசி பஸ்சும் இது ஆகும். இரவு மற்றும் அதிகாலைநேரத்தில் ஆறுகாணிக் கும், மற்ற நேரங்களில் பத்துகாணி, கணபதிக் கல், ஆலஞ்சோலை பகுதிகளுக்கும் சர்வீஸ் நடத்தி வந்த பஸ் திடீரென கடந்த 5 நாட்களாக இயக்கப்பட வில்லை என பொதுமக் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆறுகாணி பகுதிக்கு மீண்டும் அரசு போக்குவரத்து இயக்கப்பட்டது.