விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி - நீதிமன்றம் நடவடிக்கை

அரசு பஸ் மோதி கைகளை இழந்தவருக்கு ரூ.14 லட்சத்து 48 ஆயிரம் இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது

Update: 2024-07-05 07:31 GMT
ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து 

 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன்  கார்த்திகேயன் (58) இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தனது ஊருக்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் அப்போது அதிவேகமாக வந்த அரசு பஸ் கார்த்திகேயன் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவரின் இரு கைகளிலும் பஸ்ஸின் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்தார்

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது வழக்கின் விசாரணையில் பாதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்குக்கு 11,82,094 ரூபாய் இழப்பீடு தொகையும் இழப்பீடு தொகை வழங்கும் காலம் வரை 6% வட்டியுடன் வழங்க வேண்டும் என சார்பு நீதிமன்ற நீதிபதி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி உத்தரவிட்டார்.

ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் உரிய இழப்பீடு வழங்கவில்லை இதனையடுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜப்தி மனு சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது மனு விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி உரிய இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் இதனையடுத்து நீதிமன்ற பணியாளர்கள் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில்  திருச்சி செல்வதற்காக நின்று கொண்டிருந்த ஒன் டூ ஒன் அரசு பஸ்சை பயணிகளை கீழே இறக்கி விட்டு பஸ்சை ஜப்தி செய்தனர் இதனால் பஸ் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags:    

Similar News