பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து

பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் சுங்கச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2024-05-25 13:52 GMT

பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் திருமாந்துறை சுங்கச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து , சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்.... பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருமாந்துறையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த வழியாக கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருமாந்துறை சுங்கச்சாவடியை பேருந்து கடக்க முயன்றபோது, அந்த பேருந்தில் பாஸ்டேக்கில் போதிய கட்டணம் இல்லாததால், அந்த பேருந்தை சுங்கச்சாவடியை கடந்து செல்ல சுங்கச்சாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

இதனால் அந்த பேருந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சுங்கச்சாவடியிலேயே ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டன, இதனால் பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தாமதமாகும் என்பதால், வேறு பேருத்தில் ஏறி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மூலம் பாஸ்டேக்கில் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு, அந்த பேருந்து சுங்கச்சாவடியை கடந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.இந்த சம்பவத்தால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர். பாஸ்டேக்கில் பணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியில் அரசு பஸ் நின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News