மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை அதிகாரி ஆய்வு!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார் .

Update: 2024-06-27 12:06 GMT

அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இன்று வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ ,மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவினை குழந்தைகள் சாப்பிடும் போது பார்வையிட்டு ஆய்வு செய்தார் . அப்போது தலைமை ஆசிரியர் காளிமுத்து ,ஆசிரியைகள் அலமேலு, சரஸ்வதி மற்றும் சிற்றுண்டி பணியாளர்கள் பலர் இருந்தனர்.
Tags:    

Similar News