குடிநீர் வினியோகம் இல்லாததால் அரசு டவுன் பஸ் சிறை பிடிப்பு

மணலூரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம இல்லாததால் ஆவேசமடைந்த கிராமத்தினர், அவ்வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல் செய்தனர்.

Update: 2024-01-06 04:07 GMT

மணலூரில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம இல்லாததால் ஆவேசமடைந்த கிராமத்தினர், அவ்வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியல் செய்தனர். 

உளுந்தூர்பேட்டை தாலுகா மணலூர் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் மின் மோட்டார் பழுதடைந்து சீர்செய்யாமல் கிடைப்பில் போட்டனர். இதனால் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து 9.45 மணியளவில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதன் பிறகு அரசு டவுன் பஸ்சை பொது மக்கள் விடுவித்தனர்.
Tags:    

Similar News