கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-10-30 08:49 GMT

பட்டமளிப்பு விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரி 11-ம் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை கல்லூரியில் வைத்து நடைெபற்றது. கல்லூரி தலைவர் ஜெரால்டு செல்வராஜா தலைமை வகித்தார். இயக்குனர் பொறியாளர் ஐசன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எம்மி பிறேமா வரவேற்று அறிக்கை வாசித்தார். இஸ்ரோவின் முன்னாள் தலைவர் முனைவர் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், - மாணவர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி வேலை கொடுக்கிறவர்களாக மாற வேண்டும். சமுதாயத்துக்கு பயனுள்ளவற்றை கண்டுபிடிக்க வேண்டும். தோல்வி கண்டு துவண்டுவிடாமல் , தோல்வியை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் என கூறினார்.      தொடர்ந்து 194 இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கும், 31 முதுகலை மாணவர்களுக்கும் பட்டம் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.      மேலும் பல்கலை கழக அளவில் முதலிடம் பெற்ற மின்னணு தொடர்பு பொறியியல் மாணவி அஸ்வினி, 5-ம் இடம் பெற்ற முதுகலை மின்னணு தொடர்பியல் மாணவி திவ்யா, 13-ம் இடம் பெற்ற இளங்கலை சிவில் மாணவி அஜிரா ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News