தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா !
திருக்கோவிலுார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 05:52 GMT
பட்டமளிப்பு விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். பொருளாளர் ஏழுமலை, துணைத்தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனி ராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் பிரமோத் குமார், சத்யநாராயணன், சாந்தி பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு துறை கட்டுப்பாட்டு அலுவலர் பிரகாஷ் மாணவ, மாணவிகள் 750 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.