நாகை மாவட்டத்தில் 193 ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் : ஆட்சியர் தகவல்

குடியரசு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம்நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-20 11:16 GMT

மாவட்ட ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினம் 26.01.2024 அன்று காலை 11.00 மணி அளவில் கிராமசபா கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் 01.04.2023 31.12.2023 வரை பொது நிதி செலவீனம் மற்றும் 2023 24ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்த விவாதம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் குறித்த விழிப்புணர்வு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்த விவாதம், ஜல்ஜீவன் இயக்கம், குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறித்த விவாதங்கள் நடைபெறும்.

இக்கிராம சபா கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கிராமத்தை சார்ந்த அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான விபரங்களை விவாத்திட நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News