திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியரசு தினம் அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் அறிவித்துள்ளார்.;

Update: 2024-01-22 15:09 GMT

மாவட்ட ஆட்சியர் 

குடியரசு தின கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் குடியரசு தினமான" 26.012023 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இக்கிராம சபைக்கூட்டத்தில் கீழ்குறிப்பிட்டுள்ள பொருள்கள் விவாதிக்கப்பட உள்ளது. 1 கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். 2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. 3. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல் 4. மக்கள் திட்டமிடல் இயக்கம்(Peoples Plan Campaign) மூலம் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்து விவாதித்தல். 5. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), 6. ஜல் ஜீவன் இயக்கம் 7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.

8. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II 9. பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் குறித்து விவாதித்தல். 10. பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம். 11 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பண்ணை சாரா தொழில் குறித்து விவாதித்தல். சந்தைப்படுத்துதல், பண்ணைசார்,

12 தொழுநோய் ஒழிப்பு மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி. 13. இதர பொருட்கள் மேற்படி கிராம சபைக் கூட்டங்களில் வட்டாட்சியர்களை பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து உத்திரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News