கிராம சபையில் பதில் சொல்லாமல் மழுப்பிய பஞ்சாத்து தலைவர்
ஊத்தங்கரை அருகே சந்திரப்பட்டி கிராமத்தில் அடையாளத்திற்காக மட்டுமே கிராம சபை கூட்டம் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சந்திர பட்டி கிராமத்தில் 75 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு வேடப்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்திற்கு கிராம பஞ்சாயத்து தலைவர் இன்பசேகரன் மட்டுமே கலந்து கொண்டார். மற்ற அரசு சார்ந்த எந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை எந்த தீர்மான நோட்டுகளும் வைக்கவில்லை கிராம பொதுமக்கள் முன்பு எந்த கிராம பஞ்சாயத்துக்கு தேவையான தீர்மானங்களும் நிறைவேற்றாத அவல நிலை காணப்பட்டது .
மேலும், கூட்டத்தில் பஞ்சாயத்து கிளர்க்கோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்ந்த அலுவலர்களோ யாருமே கலந்து கொள்ளவில்லை இந்த நிலையில் செங்கல்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவர் தங்களது பஞ்சாயத்தில் காந்தி கிராம 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்து இருப்பதாகவும் அதற்கான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என பஞ்சாயத்து தலைவரிடம் ஒரு கட்டு ஆவணங்களை வெவ்வேறு பணிகளுக்கு சென்ற நபர்களின் பெயரில் நூறு நாள் வேலை அட்டை வைத்து பண வசூல் வேட்டை நடந்திருப்பதாக கூறி அந்த ஆவணங்களை கொண்டுவந்து கொடுத்து கேள்வி கேட்டார்.
அதற்கு விசாரணை மேற்கொண்ட பிறகு அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் என மழுப்பியவாறு பதில் கூறினார். பஞ்சாயத்து தலைவர் இன்பசேகரன் இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது மேலும் கிராமத்தில் சாலை வசதி குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி போன்றவற்றை முறையாக செய்யவில்லை என அடுத்தடுத்து பொதுமக்கள் குறை கூறியதால் சிறிது நேரம் சலதலப்பும் பரபரப்பு காணப்பட்டது. பிறகு அனைத்தையும் சரி செய்ததாக தலைவர் மழுப்பியவாறு பதில் கூறியது கிராம பகுதி மக்களிடையே முகம் சுளிக்கும் அவல நிலையை காணப்பட்டது.