குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தியா முழுவதும் இன்று 75 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டார்
இந்த உத்தரவையை ஏற்று இன்று தமிழக முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்று க் கொண்டிருக்கின்றது இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி ஊராட்சி ஒன்றியம் விஸ்வநாதபுரத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார் உப தலைவர் மற்றும் செயலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் கவுன்சிலர்கள் பெரியசாமி வார்டு உறுப்பினர்கள் மண்டல துணை வட்டாட்சியர் அலுவலர் அருணாச்சலம் சுகாதாரத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட ஏனைய துறையிலிருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையான ரேஷன் கடை சாலை வசதி குடிநீர் வசதி தற்பொழுது முழு அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன் கடை திறக்கப்படும் எனவும் அதேபோல் சாலைகள் எங்கு எங்கு பழுதாகி உள்ளனவோ எல்லாவற்றையும் ஒரு கால அடிப்படையில் சரி செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது இதனை ஏற்ற பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஏழை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்