அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா ஆரம்பம்

குமாரசாமிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு மகா கணபதி ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-03-07 16:49 GMT

மயான கொள்ளை நிகழ்ச்சி

தர்மபுரி நகரப் பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி பேட்டையில் எழுந்துருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மயான கொள்ளை திருவிழாவை ஸ்ரீ மகா கணபதி ஹோமம் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி கரகம் அழைப்பு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

நாளை சக்தி கிரகம் ஊர்வலம், குண்டபூஜை பூ மிதி விழா மற்றும் ரிஷப வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. மற்றும் பொங்கல் வைத்தல் கங்கை பூஜை, சிம்ம வாகனத்தில் அருள்மிகு ஸ்ரீ தாண்வேஸ்வரரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி வாரியும் திருவீதி உலா நடைபெறுகிறது. 9 தேதி பால் குடம் ஊர்வலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் இதனை தொடர்ந்து ஸ்ரீ தாண்டவேஷ்வருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நாளான 10 தேதி அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் பூத வாகனத்தில் மயானக் கொள்ளை பெருவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ராஜேந்திரன் உமா,சக்தி ,ராஜகுரு,நாகராஜன், ராஜகோபால், அருள்குமார், ராஜவேலு, மாதையன்,முரளி,பிரகாசம், ரங்கநாதன், அங்குராஜ், கோவிந்தராஜ்,முனுசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News