பசுந்தாள் உர விதை வழங்கும் நிகழ்ச்சி - எம்எல்ஏ சிவகாமசுந்தரி பங்கேற்பு

மாயனூரில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதை வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-06-14 04:28 GMT

தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தால் உர விதை வழங்கும் நிகழ்வு கரூரை அடுத்த மாயனூர் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்எல்ஏ சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ரவிச்சந்திரன், கிருஷ்ணராயபுரம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா, மற்றும் கிருஷ்ணராயபுரம், கடவூர், தாந்தோணி வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அப்பகுதிகளை சேர்ந்த வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரம் மற்றும் பயிர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நுண்ணூட்டக் கலவை ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கிய வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.

பிறகு விவசாயிகளிடையே பேசிய எம்எல்ஏ சிவகாமசுந்தரி, இந்தியாவில் 70 சதவீதம் விவசாயத்தை சார்ந்தது தான் தொழில் அமைப்புகள் உள்ளது. மீதமுள்ள 30 சதவீதம் தான் தொழில்துறை உள்ளது. பண்டைய கால விவசாயத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் மனிதர்களுக்கு நோய் தாக்கம் இல்லாமல் இருந்தது. தற்போது ரசாயன உரங்களை பயன்படுத்தி வருவதால் மக்கள் நோய் தாக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதேசமயம் விவசாய நிலமும் மலடாகி வருகிறது. இதனை தவிர்க்க மீண்டும் இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம்தான் "மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" ஆகும். எனவே விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி தரமான தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News