ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி. இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் தொழில்துறை. வேளாண்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் பங்கேற்புடன் வங்கியாளர்கள் கூட்டம் நடத்த உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விவசாயிகள் நன்றி தெரித்தனர்.இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளி பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள்.
வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பவ்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2024 திங்கள் வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942.00 மி.மீ ஆகும். இந்த ஆண்டு தற்பொழுது வரை 254.64 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 1,72,280 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்பொழுது வரை 7,654 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
உயிர் உரங்கள் 2024-2025 ஆம் ஆண்டிற்கு 55,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு மாதம் முடிய 12,240 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 22,914 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் திருத்திய பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 21,973 விவசாயிகள் 18,704 ஏக்கர் பரப்பு பயிர் காப்பி செய்துள்ளனர். ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.