எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோருக்கான குறைத்திருக்கும் கூட்டத்தில் வீடுகள் நிறைந்த இடத்தில் பாதுகாப்புகள் இன்றி இயங்கும் எரிவாயு குடோனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என சமுகநுகர்வோர் கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது, மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுறல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட வழங்க அலுவலர் திருமதி கீதாராணி முன்னிலை வைத்தார், மேலும் இந்த கூட்டத்தின் போது எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யும் ஏஜென்ஷிகள் செயல்பாடுகளின் குறித்து நுகர்வோர் அமைப்பினர்கள பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துத்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இருசக்கர வாகனங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும்.
மத்திய நிதியில் இருந்து வறுமை கேட்டுக்கும் கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய சமையல் எரிவாவு சிலிண்டர்கள் வசதிப்படைத்தவர்களுக்கு வழங்கப்படுவதை பறிமுதல் செய்ய செய்ய வேண்டும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் தற்போது வணிக நிறுவனங்களில் உள்ள டீ கடைகள், ஹோட்டல்களில் அதன்பயன்பாடு அதிகரித்துள்ளது இதனை கண்காணித்து தடுக்க வேண்டும், நுகர்வோருக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கூடுதலாக ரூ.50 முதல் 100 ரூபாய் வரை வசூலிப்பதை தடுக்க வேண்டும், எரிவாயு சிலின்டர்கள் வினியோகம் செய்யும் ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுகிறாதா என்று தொழிலாளர் ஆய்வாளர் கண்காணிக்க வேண்டும், கிருஷ்ணகிரி அரு Ch கிட்டம்பட்டியில் வீடுகள் நிறைந்த இடத்தில் பாதுகாப்புகள் இன்றி இயங்கும் எரிவாயு குடோனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வழியுறுத்தி அடங்கிய மனுவினை சமுகநுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைகுறளிடம் வழங்கினார்கள், அப்போது பறக்கும் படை வட்டாச்சியர் சின்னசாமி, வட்ட வழங்கல் தனி வட்டாச்சியர்கள் ரமேஷ், லதா மற்றும் நுகர்வோர் அமைப்பை சேர்ந்த சந்திரமோகன், மகபூப் பாஷா, லட்சுமிபதி, மனோகர், பிரேமலதா, சசிகலா, மஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.