ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-04 14:23 GMT
மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 306 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.65,000 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.