மல்லசமுத்திரத்தில் நிலக்கடலை மூட்டை ரூ.2520 க்கு ஏலம்

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் நடந்த ஏலத்தில் ஒரு முட்டை நிலக்கடலை ரூ.2520 வரை விற்பனையானது.

Update: 2023-10-18 12:54 GMT

நிலக்கடலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மல்லசமுத்திரத்தில் நடந்த நிலக்கடலை ஏலத்தில் ரூ.55 ஆயிரத்திற்கு ஏலம் நடந்தது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் இன்று நடந்த நிலக்கடலை ஏலத்தில் 20 மூட்டைகள் வரத்து வந்தது. இதில், பட்டாணி, ஈரப்பதம் நிலக்கடலை 60 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ.2410 முதல் ரூ.2520வரையில் என மொத்தம் ரூ.55ஆயிரத்திற்கு ஏலம் நடந்தது.



Tags:    

Similar News