இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காவலாளி படுகாயம்
தக்கலை அருகே காவலாளி மீது இருசக்கர வாகனம் மோதி காவலாளி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-06-05 07:21 GMT
விபத்து
கன்னியாகுமரி மாவட்டம்,மூலச்சல் புதுக்காடு வெட்டி. விளையை சேர்ந்தவர் கிப்சன் சாலமன். காவலாளி. சம்பவத்தன்று இவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மணலி அருகே வந்தபோது இன்னொரு பைக் கிப்சன் சாலமன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது.
படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கிப்சன் சாலமன் கொடுத்த புகாரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய பைக் ஆசாமியை தேடி வருகின்றனர்.