இயற்கை வேளாண்மையில் ஊட்டச்சத்து கரைசல்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
இயற்கை வேளாண்மையில் ஊட்டச்சத்து கரிசல்களை பயன்படுத்துவது குறித்து தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, இயற்கையான பொருட்களில் தயாரிக்கப்படும் ஊட்டச் சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு கரைசல்கள் பயன்படுத்தி. உணவு உற்பத்தி செய்வதே. செலவில்லாத இயற்கை வேளாண்மை எனப்படுகிறது. இயற்கை வேளாண்மையில் பயன்படும் ஊட்டச்சத்து கரை சல்கள் பஞ்சகாவியம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் மற்றும் பயிர் பாது காப்பு கரைசல்கள். வேப்பங் கொட்டை கரைசல், ஐந்திலை கரைசல், வேப்ப புண்ணாக்கு கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல், அக்னி அஸ்திரம், பூச்சி விரட்டி, பஞ்ச காவ்யம் கரைசல் ஆகியவையாகும்.
20 லிட்டர் பஞ்சகாவ்யம் கரைசல் தயாரிக்க, பசு மாட்டு சாணம் 5 கிலோ, கோமியம் 3 லிட்டர், பால் 2 லிட்டர், புளித்த தயிர் 3 லிட்டர், நெய் ஒரு லிட்டர், இளநீர் 3 லிட்டர், வாழைப்பழம் 12 ஆகியவை தேவையான பொருட்களாகும். தினமும் இருமுறை பிசைந்து விடவும். 4வது நாள் மற்ற பொருட்களுடன் மண் பானை அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு கையால் நன்கு கலக்கி, ஒரு துணியினால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
தினமும் இருவேளை நன்கு கலக்கவும். 21 நாட்கள் வைத்திருந்தால் பஞ்சகாவ்யம் தயார் ஆகிவி டும். அன்று போட்ட பச்சை பசும் சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், நாட்டுவெல்லம் 2 கிலோ, பயறுவகைமாவு 2 கிலோ, மண் ஒரு கைப்பிடி. அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிசைந்து, 200 லிட் டர் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை இடப்புறம் மற்றும் வலப்புறமாக கலக்கி ஒரு நாள் வைத்திருந்து மறு நாள் பயன்படுத்தலாம். தயார் செய்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். வேப்பங்கொட்டை கரைசல் தயாரிக் 10 கிலோ வேப் பங்கொட்டையை இடித்து 20 லிட்டர் நீரில் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து, 180 லிட்டர் நீருடன், 100 கிராம் சோப்பு கரைசல் கலந்து தெளிக்கலாம்.
ஊட்டச்சத்து கரைசல், பயிர் பாதுகாப்பு கரைசல்கள் ஆகியவற்றை நெல், பயறு வகை, நிலக்க டலை மற்றும் காய்கறி பயிர்களில் தெளித்தல் பூச்சி நோய் கள் கட்டுப்படுத்தப்பட்டு நல்ல மகசூலையும் எடுத்து நஞ்சு இல்லாத இயற்கையான முறையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.