'குணா குகை' யை சிறிய அளவிலான உருவத்தில் வடிவமைத்த கலைஞர்!

குனியமுத்துரையைச் சேர்ந்த வாலிபர் குணா குகையை சிறிய அளவிலான உருவத்தில் வடிவமைத்து கலையின் மூலம் அழகாக எடுத்துக் காட்டி உள்ளார்.

Update: 2024-03-05 10:17 GMT

குணா குகை

கோவை:குனியமுத்துரையைச் சேர்ந்த UMT ராஜா என்பவர் டிரெண்டிங்கில் உள்ள முக்கிய நிகழ்வுகள், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் போன்றவற்றில் வித்தியாசமான வகையில் tribute செய்வதை வாடிக்கையாக கொண்டவர்.இந்த நிலையில் தற்போது மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் பெரும் பேசு பொருளாக உள்ள சூழலில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகை போன்ற மாதிரி சிறிய வடிவில் செய்து அசத்தியுள்ளார்.குகைக்குள் சிக்கிய வரை மீட்கும் செயலையும் தன் கலையின் மூலம் அழகாக எடுத்துக் காட்டி உள்ளார். இதனை திரைப்படத்தின் இயக்குனருக்கு வெற்றிப் பரிசாக வழங்க உள்ளதாகவும் UMT ராஜா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News