கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயிலில் குண்டம் திருவிழா

தாளாவாடி கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயிலில் குண்டம் திருவிழா நடந்தது.

Update: 2024-03-27 13:37 GMT

தாளாவாடி கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயிலில் குண்டம் திருவிழா நடந்தது.

தாளாவாடி .கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே அனுமதி பூசாரி ஒருவர் மட்டும் தீ மிதிக்கும் குண்டம் திருவிழா தாளவாடி, கொங்கள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோவில் குண்டம் திருவிழாவில் பூசாரி மட்டும் குண்டம் இறங்கினார். சத்தியை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற கொங்கள்ளி மல்லிகார்ஜூனசாமி கோயில் குண்டம் திருவிழா நேற்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மிகவும் பழமை வாய்ந்த மல்லிகர்ஜீனசாமி கோவில் தாளவாடி அருகே கொங்கள்ளி மலை பகுதியில் அடர்ந்த வனப்பகுதி நடுவே நான்குப்புறமும் மலைகள் சூழ்ந்த வனப்பகுதியில் மல்லிகார்ஜூனசாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. தமிழக - கர்நாடக மாநில எல்லையில் கோயில் உள்ளதால் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மைசூர், மாண்டியா, குண்டல்பேட்டை பகுதிகளிலிருந்து பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்றுமுன்தினம் மாலை முதல் கோயிலில் குவிந்தனர்.

நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் முன்பு தயாராக இருந்த குண்டத்தில் பூசாரி நடேசன் பக்திப்பரவசத்துடன் இறங்கி நடந்து வந்தார். அதன் பின்னர் பக்தர்கள் அனைவரும் குண்டத்தை வணங்கி சாம்பலை திருநீராக எடுத்து சென்றனர். இக்கோயிலில் பூசாரி ஒருவர் மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். பெண்கள் இக்கோயிலுக்கு வர அனுமதியில்லை. கோயிலுக்கு ஒரு கிலோமீட்டருக்கு முன்பே பெண்கள் வருவது தடுக்கப்படுகிறது.

ஆண்களே பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். விழா நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் தாளவாடி போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News