பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மறு பூஜையுடன் குண்டம் விழா நிறைவு
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மறு பூஜையுடன் குண்டம் விழா நிறைவு;
Update: 2024-04-02 05:10 GMT
குண்டம் விழா நிறைவு
சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் கடந்த 26 ஆம் தேதி குண்டம் விழா நடைபெற்றது லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நிறுத்திக் கடன் செலுத்தினார்கள் அதைத்தொடர்ந்து 27ஆம் தேதி சிம்ம வாகனத்தில் 29ஆம் தேதி தங்க தேரிலும் அம்மன் உடன் நடைபெற்றது இந்த நிலையில் நேற்று கோவிலில் மறுபூஜை நடந்தது இதயொட்டி அம்மனை தரிசனம் செய்ய அதிகாலையில் இருந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து காத்திருந்தனர் கோவில் நிர்வாகம் சார்பில் தனியார் சார்பிலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இரவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது மறுபூஜையொட்டி சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன நேற்று நடந்த மறு பூஜையுடன் இந்த ஆண்டுக்கான பண்ணாரி மாரியம்மன் குண்டம் விழா நிறைவு பெற்றது