கஞ்சா கடத்திய 2 பேருக்கு குண்டாஸ்
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
Update: 2024-07-04 03:37 GMT
ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு அரசு பேருந்தில் கடந்த மாதம் கஞ்சா கடத்திய சோலைஹால் தெருவை சேர்ந்த சுப்பிரமணி, மதன்குமார், மதுபாலன், மாதவன், தாமரைக்கண்ணன், ராஜா ஆகிய 6 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சுப்பிரமணி, மதன்குமார் ஆகிய 2 பேரை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.