கஞ்சா விற்பனை செய்தவர் மீது பாய்ந்த குண்டாஸ்
திருநெல்வேலி மாவட்டம்,ராதாபுரத்தில் கஞ்சா விற்பனைச் செய்தவரை குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Update: 2024-02-09 02:30 GMT
நெல்லை மாவட்டம், ராதாபுரத்தை சேர்ந்த நாராயணபெருமாள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளார்.இந்த நிலையில் இவர் மீது மாவட்ட சைபர் கிரைம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 ன் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்பிக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில் ஆட்சியர் உத்தரவின் படி நாராயணபெருமாள் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.