தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் மீது பாய்ந்த குண்டாஸ்!

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-07-04 06:04 GMT

குண்டாஸ்

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் பகுதியை சேர்ந்த சிவக்குமார் இவரை தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

எஸ்.பி-யின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி சிவக்குமாரை தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து அதற்கான ஆணை நகலினை வேலூர் மத்திய சிறையில் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் இராஜா சிவக்குமாரிடம் வழங்கினார்.

Tags:    

Similar News