சாலையில் சுற்றி திரிந்த கால்நடைகளை கோசாலையில் ஒப்படைப்பு !

காஞ்சிபுரம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் தலைமையிலான குழுவினர் கால்நடைகளை பறிமுதல் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

Update: 2024-03-15 09:18 GMT

கால்நடை

காஞ்சிபுரத்தில் விபத்து ஏற்படும் வழியில் சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை காஞ்சிபுரம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநிலம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு சாலையில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள் சிக்குவதாக ஏராளமான புகார்கள் தொடர்ச்சியாக வந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரத்தில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றி தெரியும் கால்நடைகளை மாநகராட்சி பறிமுதல் செய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு அதற்கான செய்தி பத்திரிக்கை வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கால்நடைகள் சுற்றித் திரிவதாக பொதுமக்கள் தொடர் புகார் தெரிவித்ததால் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக இன்று காலை காஞ்சிபுரம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் அருள்நம்பி தலைமையிலான குழுவினர் ராஜாஜி மார்க்கெட், காந்தி சாலை , விளக்கடி கோயில் தெரு, செவிலிமேடு காவலன்கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பறிமுதல் செய்யும் பணி தொடங்கினர். காலை 7:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 9 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் ஆறு மாடுகள் சினை பிடித்திருந்த நிலையில் கால்நடை மருத்துவரின், மருத்துவ பரிசோதனைக்கு பின்பு அதற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் மீதமுள்ள மாடுகள் கோசாலைக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கடைசி ஆறு மாத காலத்தில் இதே போன்று சாலையில் சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்ட மாடுகளை பறிமுதல் செய்து, கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கு பின் திருவண்ணாமலை உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News