அனுமன் ஜெயந்தி; சிறப்பு யாக வழிபாடு
குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு யாக வழிபாடு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு யாக வழிபாடு நடந்தது. அனுமன் ஜெயந்தியையொட்டி திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஷ்வரர் கோவிலில், சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், பஞ்சமுக ஆஞ்சேநேயர் கோவில் ஆகியன உள்ளன. இந்த கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டது.
திருவள்ளுவர் நகர், வாசுகி நகர், நடராஜா நகர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். இன்று பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இதே போல் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி கோவிலில் உள்ள பெரிய அளவிலான ஆஞ்சநேயருக்கும், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.