துறைமுக நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

தேங்காய்பட்டணத்தில் அலை தடுப்பு சுவர் பணிகளை துவங்க கோரி துறைமுக கண்காணிப்பு குழு உள்ளிருப்பு போராட்டம்

Update: 2024-03-08 09:23 GMT


தேங்காய்பட்டணத்தில் அலை தடுப்பு சுவர் பணிகளை துவங்க கோரி துறைமுக கண்காணிப்பு குழு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.


கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துறைமுகத்தின் கட்டுமான குறைபாடுகளால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

இதனால், துறைமுகத்தில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் பிரதான தலை அலை தடுப்புச் சுவர் நீட்டிக்கும் பணி நடைபெற்று வந்தது இந்த பணியானது ஒன்றிய நீர் மற்றும் சக்தி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடைபெற்று வந்தது. இந்த அலை தடுப்பு சுவர் பணிகள் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.மீண்டும் இந்தப் பணிகளை தொடங்கவேண்டும் என துறைமுக கண்காணிப்பு குழு துறைமுக நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News