தர்மபுரியில் ராகி பயிர் அறுவடை தீவிரம்
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை ஆரம்பிக்க உள்ள நிலையில் நன்கு விளைந்த ராகி பயிர் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது
Update: 2024-05-14 03:05 GMT
தர்மபுரி மாவட்டம் பெரும்பான்மையான சிறுதானியங்களை உற்பத்தி செய்வதில் முதன்மையான மாவட்டமாக விளங்குகிறது.நல்லம்பள்ளி, பாலக்கோடு காரிமங்கலம், பென்னாகரம், அரூர்,மொரப்பூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பான்மை யான விவசாயிகள் சிறு சிறுதானியங்களில் முக்கிய தானியமாக கருதப்படும் கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகியை பயிர் செய்து வருகின்றனர். கோடை மழைக்காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் தற்போது ராகி பயிர் செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியில் இறங்கியுள்ளனர். மழைக்காலத்தில் ராகி பயிரை பண்படுத்த முடியாது என்பதால் மழைக்கு முன்பே அறுவடை பணி தீவிரமாக நடைபெறுகிறது.