தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

மதுராந்தகம் அருகே அடிப்படை வசதி குறித்து எந்த கட்சியும் வாக்குறுதி தராததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

Update: 2024-04-19 11:18 GMT

மதுராந்தகம் அருகே அடிப்படை வசதி குறித்து எந்த கட்சியும் வாக்குறுதி தராததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செய்யூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட விளங்கனூர் கிராமத்தில் 300 - க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிப்படை வசதி சாலை, கால்வாய் மற்றும் இலவச வீட்டுமனை வேண்டு மென்று அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை அவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதி செய்து தரவில்லை என கூறி இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால் விளங்கனூர் கிராம மக்களுக்கு காட்டுதேவத்தூர் கிராமத்தில் வாக்குச்சாவடி 264 இல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி இரண்டு மணி நேரத்துக்கு மேலாகியும் 318 வாக்குகளில் இதுவரை 4 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.அதிகாரிகள் வந்து உத்தரவாதம் கொடுத்தால் நாங்கள் வாக்களிப்போம் அதுவரை வாக்களிக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்
Tags:    

Similar News