மதுராந்தகத்தில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை.

மதுராந்தகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-26 07:24 GMT

காவல் நிலையம் (பைல் படம்)

செங்கல்பட்டு மாவட்டம்,சித்தாமூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சுரேந்தர். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் இவர் பணி இதை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் சுரேந்தர் மனைவியை விட்டு பிரிந்து மதுராந்தகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை என தெரிகிறது. இந்தநிலையில் அவரது குடியிருப்பு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் காவள்ளர்கள் சுரேந்தர் வீட்டை உடைத்து பார்த்த பொழுது உள்ளே அவர் தூக்கில் தொங்கி இருந்தது தெரியவந்தது.

உடனடியாக பிரேதத்தை கைப்பற்றிய மதுராந்தகம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிமையில் இருந்த காவலர் தற்கொலை செய்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News