ஆம்பூர் அருகே விபத்தில் தலைமை பெண் காவலர் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஏறிய விபத்தில் தலைமை பெண் காவலர் உயிரிழந்தார்.;

Update: 2024-04-18 05:49 GMT

ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஏறிய விபத்தில் தலைமை பெண் காவலர் உயிரிழந்தார்.  

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி ஏறிய விபத்தில் தலைமை பெண் காவலர் தலை நசுங்கி உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த பரிமளா என்பவர் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் நிலையில் இன்று நாளை பணி முடிந்து கணவரின் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது மாதனூர் - ஒடுகத்துர் செல்லும் சாலையில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் பழுதாகி நின்ற லோடு ஆட்டோ திடிரென பரிமளா வந்த இருசக்கர வாகனத்தின் மீது பக்கவாட்டில் மோதியதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி பரிமளா கீழே விழுந்துள்ளார்.

Advertisement

அப்போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.,உடன் பயணித்த அவரது கணவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்., இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சாலையோரம் பழுதான லோடு ஆட்டோவை நிற்கவைத்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க ஷாப் உரிமையாளரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

Similar News