சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு
சின்னாளபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினமும் மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 06:35 GMT
கழிவுநீர்
சின்னாளபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தினமும் மாலை நேரத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சின்னாளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பூஞ்சோலை, பொம்மையசுவாமி கோயில் பகுதிகளில் தூர்வாரப்படாத கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கலந்த கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது.
மேலும் சாலை பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும் கழிவுநீர் தேக்கத்தால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.