அங்கித் திவாரி ஜாமின் மனு மீது இன்று விசாரணை

வழக்கறிஞர் 2-வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-02-06 06:40 GMT

அங்கித் திவாரி ஜாமின் மனு

திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அங்கித் திவாரி சிக்கினார். 15 மணி நேர விசாரணைக்கு பின் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீனில் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், அங்கித் திவாரி தரப்பில் அவரது வழக்கறிஞர் 2-வது முறையாக நடுவா் நீதி மன்றத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா். கடந்த 1-ஆம் தேதிக்கு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News