அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம்

அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொது மக்களின் பல்வேறு அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-03 03:40 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பொதுவாக தை மாதம் முடிவடைந்து மாசி மாதம் துவங்கும் போது பனி விலகி கோடை காலம் துவங்கும்.

இந்த நிலையில் தற்போது கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையிலும் அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாம்பட்டி,வேப்பம்பட்டி, கூட்ரோடு,தீர்த்தமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை நேரங்களில் மூடுபனி அதிகரித்து காணப்படுகிறது.

சீதோஷண நிலை மாற்றம் காரணமாக ஏற்படும் இந்த பனிமூட்டத்தால் பல்வேறு விவசாயப் பணிகள் பாதிப்பு அடைந்து வருவதாகவும் இதனால் விளைச்சலில் மா சாகுபடி பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் இந்த மூடுபனி யினால் சாலைகளில் செல்வோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்ட வார செல்கின்றனர். இதனால் காலை நேரங்களில் நடைபெறும் அத்தியாவசிய பணிகள் பாதிப்படைந்துள்ளது

Tags:    

Similar News