ராஜபாளையத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அரை மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 07:43 GMT
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்ததால் இராஜபாளையம் நகரில் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது குறிப்பாக காந்தி சிலை ரவுண்டானா பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர்
நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் ஓடைகளை முறையாக தூர்வாராமல் இருப்பதால் சாலைகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும் என்றும் மேலும் கழிவு நீர், மழைநீர், தேங்கி இருக்காது எனவும் நகராட்சி நிர்வாகம் மழை காலங்களில் வாறுகால் மற்றும் கழிவுநீர் ஒடைகளை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்