தூத்துக்குடியில் அதிகாலை முதல் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2024-05-14 04:41 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பிற்பகலில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்டது.

இதை தொடர்ந்து காலை 6 மணி அளவில் சாரல் மழை பெய்தது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலையில் வெள்ளப்பெருக்கில் ஓடுகிறது இதனால் வெப்பம் தணிந்து குழுமை காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் மாவட்டத்தில் புதுக்கோட்டை, வாகைக்குளம், ஓட்டப்பிடாரம், வல்லநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News