கனமழை - திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணை பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரித்தது.

Update: 2024-04-22 06:38 GMT

 திற்பரப்பு அருவியில் வெள்ளம் போல் கொட்டும் நீர் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் அவ்வப்போது லேசான மழையும் பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.  இந்நிலையில் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணை பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

இதை போல மலையோர பகுதிகளான ஆறு காணி,  கடையாலுமூடு, களியல், நெட்டா  மணலோடை , திருவரம்பு உள்ளிட்ட இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. கோடையில் வெயில் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரைந்து குறைந்து காணப்பட்டது. நேற்று பெய்த மழையால் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதனால் அருவிக்கு  வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News