அதி கனமழை எச்சரிக்கை - ஆட்சியர் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் அதி கனமழை பொழிய வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகள் மற்றும் கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Update: 2024-05-19 06:20 GMT
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மாவட்டத்தில் பரவலாக கனமழை மற்றும் அதீத கனமழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வருவதற்கு சாத்தியகூறு இருப்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது. இதனால் குளங்கள் ஏரி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் அமர்ந்து இருக்க வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.