மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
மதுராந்தகத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதேபோல் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் பாண்டிச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மாலை நேரத்தில் இருள் சூழ்ந்த மேகம் மற்றும் பலத்த காற்று வீசியது. தற்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம், ஒரத்தி,கருங்குழி, மேலவேலம்பேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது..