மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில் இடியுடன் கூடிய கனமழை
மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.;
Update: 2024-06-24 02:32 GMT
மழை
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சுற்று வட்டார பகுதியில் காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது மாலை நேரத்தில் திடீரென வானம் கரு மேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய மிக கனமழை மதுராந்தகம், மேலவளம்பேட்டை, கருங்குழி, சித்தாமூர்,எல் எண்டத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாககன இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வருட காலமாக காலை நேரத்தில் வெயில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரத்தில் கனமழை கொட்டி வருகிறது.. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.