ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல்

வேப்பனப்பள்ளியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Update: 2024-06-16 13:54 GMT

வேப்பனப்பள்ளியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


வேப்பனப்பள்ளியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஆனாது தமிழக கர்நாடகா ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேப்பனப்பள்ளிக்கு வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் வேப்பனப்பள்ளி காந்தி சிலை முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இருபுறமும் சாலைரோ ஆக்கிரமிப்புகளால் கடுமையான போக்குவரத்து நேரிசல் ஏற்ப்படுகிறது.

காலை ஏழு மணி முதல் 10 மணி வரைக்கும் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரையும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. மேலும் சாலையோர கடைகள் அதிக அளவில் ஆக்கிரமிப்பித்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றன. உடனடியாக இந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமென்று நெடுஞ்சாலை துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News