மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 12:34 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் என்னுமிடத்தில் சாலையின் குறுக்கே கடக்க முயன்ற கண்டனர் லாரி மீது சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மோதியதில் லாரியின் முன்பாகம் சேதமடைந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சிறு காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்கின்றன இந்த சாலை விபத்தால் சுமார் மூன்று கிலோ மீட்டர் அளவில் வாகனங்கள் செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் காவல்துறையினர் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.