புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் !
குமாரபாளையம் புறவழிச்சாலையில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-01 10:59 GMT
போக்குவரத்து நெரிசல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக விடுமுறை நாட்களில் போக்குவரத்து அதிகம் இருப்பது வழக்கம். நேற்று விடுமுறை நாள் என்பதுடன், தேர்தல் பணிக்காக பல பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றும், வந்தும் கொண்டிருப்பதால் குமாரபாளையம் புறவழிச்சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் பணிகள் கடந்த 5 மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அனைத்து வாகனங்களுள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டதால், வேகமாக செல்ல முடியாமல், மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலை எஸ்.எஸ்.எம். கல்லூரி முதல் சுமார் மூன்று கி.மீ. தூரம் நீடித்தது.