வீரகேரளம்புதூரில் கனரக வாகனங்கள் இயங்க தடை !
சுரண்டையில் பள்ளி மாணவர்கள் செல்லும் நேரங்களில் சாலையின் ஓரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 10:22 GMT
கனரக வாகனங்கள் இயங்க தடை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பகுதியில் பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகமாக வருகின்றனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இது குறித்து கனரா வாகங்களை இயக்க காவல்துறை தடை விதித்திருக்கிறது. இதனையடுத்து இன்று காலையில் சுரண்டையில் பள்ளி மாணவர்கள் செல்லும் நேரங்களில் சாலையின் ஓரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆகவே இதனால் மாணவ, மாணவிகள் பயமின்றி நடந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.