வந்தவாசியில் பொறுப்புடன் பைக் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் பரிசு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பொறுப்புடன் பைக் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2024-01-31 13:14 GMT


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பொறுப்புடன் பைக் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் பரிசு வழங்கப்பட்டது.


சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பொறுப்புடன் பைக் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் பரிசு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தேசூர் திமுக நகர செயலாளர் டி கே மோகன் தெள்ளார் சாலையில் நடத்தும் பெட்ரோல் பங்க்கில், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி பொறுப்புடன் பைக் ஓட்டுபவர்களுக் கும் விபத்து இல்லாமல் ஒரு வார காலத்தில் பைக் ஓட்டுபவர்களுக்கும் தினந் தோறும்றும் பைக்கிற்கு பெட் ரோல் போடும்போது பைக் எண் கொண்டு குலுக்கல் முறையில் 10 நாட்களில் தினந்தோறும் ஒரு நபர் ஹெல்மெட் குடை பரிசு பெறுபவர்களாக தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.

Advertisement

இதில், தேர்ந்தெடுக்கப் பட்ட 40 நபர்களில் 20 நபர்களுக்கு ஹெல்மெட், 20 நபர்களுக்கு குடை பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் மஞ் சுளா மோகன் தலைமை தாங்கினார். தென்தின்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.சிவக்குமார். திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜி.இளங் கோ வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திமுக நகர செயலாளர் டி.கே.மோகன் 20 பேருக்கு ஹெல்மெட், 20 நபர்களுக்கு குடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தேசூர் ஈஸ்வரன் கோயில் அறங்காவல் குழு தலைவர் ஜெ.எஸ்.சரவணன், கவுன்சிலர் பூக்கடை வடிவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News