வெளிநாடுகளில் உயர்படிப்பு; பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-28 04:38 GMT

மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் 

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-       2024-25ம் கல்வியாண்டிற்கான முனைவர் பட்டம் (பிஎச்.டி) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பழங்குடியின நல அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.     ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

Advertisement

 இது தொடர்பாக கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் அனைத்து பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் உயர் படிப்பை தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகை பெற உரிய முறையில் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.      இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் மே 31ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு https://overseas.tribal.gov.in இணையதளம் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News